உலக்கோப்பையில் அதிக சதம் அடித்த பட்டியலில் இந்திய அணி முதலிடம்!
நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியும் , ஆஸ்திரேலியா அணியும் மோதியது. இப்போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள் எடுத்தது. பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டை இழந்து 50 ஓவரில் 316 ரன்கள் எடுத்து 36 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதுவரை நடந்த உலக்கோப்பையில் அதிக சதம் அடித்த அணிகளில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.நேற்று நடந்த போட்டியில் தவான் 117 ரன்கள் குவித்து சதம் விளாசினார்.
அதன் மூலம் இந்திய அணி இதுவரை நடந்த உலகோப்பையில் 27 சதங்களை நிறைவு செய்து முதல் இடத்தில் உள்ளது.இரண்டாவது இடத்தில் 26 சதங்களை அடித்து ஆஸ்திரேலியா அணி உள்ளது.
27 India
26 Australia
23 Sri Lanka
17 West Indies
15 New Zealand
14 South Africa/ Pakistan/ England