“உலகிலேயே அதிக இறக்குமதி வரி வசூலிக்கும் நாடு இந்தியா” – எலான் மஸ்க்
“உலகிலேயே அதிக இறக்குமதி வரி வசூலிக்கும் நாடு இந்தியா” என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் தற்போது பெட்ரோல் விலை ரூ. 100 ஐ தாண்டியுள்ளது, மேலும் டீசல் விலை ரூ. 100 ஐ நெருங்கி வருகிறது. இதனால் பலரது வாகனங்களை வெளியில் எடுத்து செல்லமுடியாமல் வீட்டிலேயே வாகனங்களை முடக்கி வைக்கும் நிலை வந்துள்ளது. இதனால் பலரும் சைக்கிளுக்கு மாறி வருகின்றனர்.
மேலும், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க பலரும் ஈடுபாடு காட்டி வருகின்றனர். எலக்ட்ரிக் வாகனங்களின் விலையோ மிகஅதிமாகும், இதற்கு அதிகமான இறக்குமதி வரி விதிப்பு தான் முக்கிய காரணம் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த யூடியூபர் ஒருவர், இந்தியாவில் டெஸ்லாவின் எலக்ட்ரிக் வாகனங்களை இறக்குமதி செய்யுமாறு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். உலகிலேயே அதிகமான இறக்குமதி வரி விதிக்கும் நாடு இந்தியா என்று கூறியுள்ளார். இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இந்திய அரசிற்கு டெஸ்லா நிறுவனம் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. இதில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.