கொரோனாவை எதிர்த்து போராடும் இந்தியா…! உதவிக்கரம் நீட்டும் பிரான்ஸ்…!

Default Image

கொரோனா வைரஸோடு போராடும் இந்தியாவிற்கு 10 மில்லியன் டாலர்களை கனடா வழங்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரசுக்கு எதிராக இந்தியா கடுமையாக போராடி வருகிறது. இந்த வைரஸை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரசால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சில நாடுகள் இந்தியாவிற்கு உதவும் வகையில் பல விதங்களில் உதவி கரம் நீட்டுகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸோடு போராடும் இந்தியாவிற்கு 10 மில்லியன் டாலர்களை கனடா வழங்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் கார்னியோ, தனது இந்தியப் பிரதிநிதி ஜெய்சங்கருடன் நேரடியாக உரையாடினார். அப்போது கூடுதல் மருத்துவ உபகாரணங்களை நன்கொடையாக அளிப்பது உட்பட, என்ன உதவிகள் செய்ய முடியும் என்பது குறித்து பேசினார்கள் என்றும், எங்களால் முடிந்த அனைத்து வகையிலும் ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்போது 10 மில்லியன் டாலர்களை நாங்கள் வழங்க தயாராக உள்ளோம். இது ஆம்புலன்ஸ் சேவை முதல் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது ஆகியவற்றுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

 மேலும், இந்தியாவின் பயங்கரமான மற்றும் சோகமான புகைப்படங்களை பார்க்கும் போது, வருத்தம் அளிக்க கூடியதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 60 ஆயிரத்து 960 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்