‘இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சனையில் மூன்றாவது நாடு தலையிட தேவையில்லை.’ – சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஷாவோ லெஜியன்.
இந்தியாவிற்கும், சீனாவிற்கும் சில நாட்களாக எல்லை பிரச்சனை எழுந்து வந்தவண்ணம் இருக்கிறது. இதனால் இரு நாட்டு எல்லையிலும் ராணுவ வீரர்கள் குவிந்துள்ளதால் இந்தியா- சீனா எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இருநாட்டிற்குமான இந்த பதட்டமான சூழலை தவிர்க்க அமெரிக்காவானது இந்தியா – சீனா இடையே மத்தியஸ்தம் செய்து பிரச்னையை தீர்த்துவைக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், சீன வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் அதிகாரி ஷாவோ லெஜியன் கூறுகையில், இந்தியாவுடனான எல்லை பிரச்னையை இரு நாட்டினரும் ஆலோசனை செய்து தீர்த்து கொள்வோம். இதில் மூன்றாம் நாடு தலையிட வேண்டாம் என தெரிவித்தார். மேலும், தற்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது இதனால் இருநாட்டினரும் எளிதாக ஆலோசனை செய்து தீர்த்துக்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…
கேரளா : பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவருக்கு அவரை காதலித்து வந்த கிரிஷ்மா கடந்த…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து அப்பகுதியில் 2வது விமான நிலைய முனையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய…