இந்தியாவிற்கு 10 பதக்கங்களை உறுதி செய்து வீரர்கள் அசத்தல்
இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் வீராங்கனைகள் பத்து பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.
இந்திய ஓபன் குத்துசண்டை போட்டியானது அசாமின் கவுகாத்தி நகரில் இன்று தொடங்கியது. இதில் 16 நாடுகளை சேர்ந்த 200 வீரர்கள்,வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் இந்திய தரப்பில் 38 வீரர்கள் மற்றும் 37 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவிற்கு குத்துச்சண்டை போட்டியில் தங்க பத்தக்கதை ஒரு தடவை அல்ல ஆறு முறை குவித்த தங்க மங்கை மேரி கோம் இதில் 51 கிலோ எடை பிரிவில் பங்கேற்றார்.
மேலும் இந்தியா சார்பில் 6 வீரர்கள், 4 வீராங்கனைகள் அரை இறுதி போட்டிக்குள் நுழைந்து பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.
பதக்கத்தை உறுதி செய்த வீரர்கள் பட்டியல் ஆண்கள் குத்து சண்டை பிரிவில்:
81 கிலோ எடை பிரிவில் -பிரிஜேஷ் யாதவ் மற்றும் சஞ்சய்
91 கிலோ எடை பிரிவில் -நமன் தன்வார் மற்றும் சஞ்ஜீத்
91 கிலோ எடைக்கும் அதிகமான பிரிவில் -சதீஷ் குமார் மற்றும் அதுல் தாகூர்
ஆகியோர் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளனர்.
அதே போல் பெண்கள் பிரிவில் :
69 கிலோ எடை பிரிவில் – லவ்லினா போர்கோஹைன் மற்றும் அஞ்சலி
75 கிலோ எடை பிரிவில் -பாக்யபதி கச்சாரி மற்றும் சவீதி பூரா
ஆகியோர் அரை இறுதிப்போட்டிக்குள் தங்கள் பிரிவில் தகுதி பெற்று விளையாட உள்ளனர்.கடந்த முறை இந்த போட்டிகளில் ஆறு தங்க பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.