73 சாலைகள்… கண்டுபிடிப்பு!2020க்குள் இது நடக்கும்-ராணுவம்

Default Image

இந்தியா-சீனா இடையே கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடும் மோதல் நடைபெற்று வருகிறது.மேலும் பலகட்ட பேச்சுவார்த்தைகள்  நடந்து வந்தாலும் எல்லையில் இரு நாடுகளும் தங்களது படைகளையும்,ஆயுதங்களையும் குவித்து வருகிறது.

இந்நிலையில்  மூப்படைகளையும் தயார இருக்கும் படி இந்திய ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சீன எல்லையில் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதை வேகப்படுத்த இந்தியா முடிவு எடுத்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.அதன்படி 2022ம் ஆண்டுக்குள் 42 சாலைகளை முடிக்க உள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

New road to Kailash Mansarovar via Lipulekh Pass and why Nepal is ...

ஏன்? இந்திய அரசு  சாலைகளை அமைக்க வேகப்படுத்துவதற்கு காரணம்  தற்போது வரை சீன எல்லையில் இந்தியாவிற்கு  73 சாலைகள் உள்ளதாக மத்திய அரசு கண்டறிந்துள்ளது.அந்த 73 சாலைகளில் 28 சாலைகள்  தற்போது மேம்பபடுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.மீதம் 33 சாலைகள் கட்டுமானத்தில் இருந்து வருகிறது.மேலும் மீதமுள்ள சாலைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.இவ்வாறு சீன எல்லையில் சாலைகள் வேகமாக கட்டி முடிக்கப்பட்டால் ராணுவம் விரைந்து செல்லவும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளும் விரைவது மட்டுமின்றி சீனாவின் ஊடுருவலை தடுக்க வழிவகுக்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்