அமெரிக்க- இந்தியா இருதரப்பு உறவுக்கு வானமே எல்லை !
ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுக்கு வானமே எல்லை என்று கூறியுள்ளார்.
வாஷிங்டனில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சிங் சர்னா ((Navtej Singh Sarna))அளித்த விருந்தில் பங்கேற்றுப் பேசிய நிக்கி ஹாலே, பொருளாதார மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை பிரதமர் மோடி தீவிரமாக மேற்கொண்டு வருவதாக பாராட்டுத் தெரிவித்தார். இதேபோன்ற செயல்பாடுகளை அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் நிர்வாகமும் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, இரண்டு ஜனநாயகங்களும் இணைந்து பணியாற்றுவதற்கான பொது மதிப்பீடுகளை பெற்றிப்பதாகவும் நிக்கி ஹாலே கூறினார். இந்தியாவுடனான உறவு மேம்பாடு அடைவதில் அதிபர் டிரம்ப் மிகுந்த விருப்பம் கொண்டிருப்பதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுக்கு வானமே எல்லை என்றும் நிக்கி ஹாலே தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.