கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் சுதந்திர தின ஸ்பெஷலாக வரலாற்றில் முதல் முறையாக இந்திய தேசிய கொடியின் வண்ணங்களில் ஒளிரப்பட்டது.
இந்தியா தனது 74வது சுதந்திர தினத்தை நேற்று கொண்டாடியது. அந்த வகையில் கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் சுதந்திர தின ஸ்பெஷலாக வரலாற்றில் முதல் முறையாக இந்திய கொடியின் வண்ணங்களில் ஒளிரப்பட்டது. இந்தோ-கனடா கலைஞர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகின் இயற்கை அதியங்களில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சியில் இந்திய தேசிய கொடியின் வண்ணங்களில் பிரதிபலிக்கப்பட்டது.
இந்த காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது மேலும் டொராண்டோவின் சிட்டி ஹாலிலும் இந்தியாவின் தேசிய கொடி எழுப்பப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக இவை அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் ஒட்டாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள துணை தூதரங்களிலும் கொடி ஏற்றப்பட்டது.
மேலும் ஒட்டோவா, வான்கூவர், கல்கரி மற்றும் பிராம்ப்டன் உள்ளிட்ட நாட்டின் பல நகரங்களில் கார்கள் மீது இந்திய கொடிகளை பறக்கவிட்டு பேரணிகளும் நடைபெற்றது. மேலும் இந்தோ – கனடா பொது சேவை ஓக்வில்லே தொகுதியின் ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் கொள்முதல் அமைச்சரான அனிதா ஆனந்த் இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன பாடினார்.
இந்த நிகழ்வுகள் கன்னடாவில் வசிக்கும் இந்திய மக்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…