சுதந்திர தின ஸ்பெஷல்: வரலாற்றில் முதல் முறையாக நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒளிரப்பட்ட இந்திய தேசிய கொடி.!

Default Image

கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் சுதந்திர தின ஸ்பெஷலாக வரலாற்றில் முதல் முறையாக இந்திய தேசிய கொடியின் வண்ணங்களில் ஒளிரப்பட்டது.

இந்தியா தனது 74வது சுதந்திர தினத்தை நேற்று கொண்டாடியது. அந்த வகையில் கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் சுதந்திர தின ஸ்பெஷலாக வரலாற்றில் முதல் முறையாக இந்திய கொடியின் வண்ணங்களில் ஒளிரப்பட்டது. இந்தோ-கனடா  கலைஞர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகின் இயற்கை அதியங்களில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சியில் இந்திய தேசிய கொடியின் வண்ணங்களில் பிரதிபலிக்கப்பட்டது.

இந்த காட்சி பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது மேலும் டொராண்டோவின் சிட்டி ஹாலிலும் இந்தியாவின் தேசிய கொடி எழுப்பப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக இவை அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் ஒட்டாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள துணை தூதரங்களிலும் கொடி ஏற்றப்பட்டது.

மேலும் ஒட்டோவா, வான்கூவர், கல்கரி மற்றும் பிராம்ப்டன் உள்ளிட்ட நாட்டின் பல நகரங்களில் கார்கள் மீது இந்திய கொடிகளை பறக்கவிட்டு பேரணிகளும் நடைபெற்றது. மேலும் இந்தோ – கனடா பொது சேவை ஓக்வில்லே தொகுதியின் ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் கொள்முதல் அமைச்சரான அனிதா ஆனந்த் இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன பாடினார்.

இந்த நிகழ்வுகள் கன்னடாவில் வசிக்கும் இந்திய மக்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்