சுதந்திரதினத்தை கொண்டாடியதற்க்கு வேலையை காலி செய்த வங்கி நிர்வாகம்
வருடா வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி நம்நாட்டில் சுதந்திர தின விழா கொண்டாடப்படும். அது இந்தியாவை தாண்டி வெளிநாட்டில் வசிக்கும் இந்திய மக்களும் கொண்டாடுவர்.
அதேபோல சிங்கப்பூரில் வசிக்கும் ஓர் வெளிநாட்டு வாழ் இந்தியரான அவிஜித் தாஸ் பட்நாயக் என்பவர் அங்குள்ள வங்கியில் 10 வருடங்களுக்கு மேலாக வேலை செய்து வருகிறார். அவர் இந்த சுதந்திர தினத்தன்று தனது இணையபக்கத்தில் ஓர் புகைப்படம் ஒன்று வெளியிட்டு அதனை அனைவரும் காமன் டிபியாக வைக்குமாறு கூறினார்.
அந்தபடத்தில் ஒரு டீசர்ட் உள்ளே சிங்கபூரின் கொடி கிழிக்கபட்டு அதனுள் இந்திய தேசிய கொடி இருப்பதுபோல காட்டபட்டிருக்கும்.
இதனால் கோபமடைந்த வங்கி நிர்வாகம் அவரை வேலையிலிருந்து தூக்கிவிட்டது. சிங்கபூரில் அம்மாதிரி தேசியகொடியை அவமானபடுத்தினால் ஆயிரம் சிங்கபூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டிருக்குகும்.
DINASUVADU