இரண்டாவது டெஸ்டில் இந்திய அணிக்கு சச்சின் சொல்லும் 3 யோசனைகள்!
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரில் அந்த அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளும் 2-வது டெஸ்ட்டில் செஞ்சுரியன் நகரில் இன்று மோதுகின்றன.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய வீரர்கள் செய்ய வேண்டிய முக்கியமான 3 விஷயங்களை முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், ‘தென்னாப்பிரிக்க மைதானங்களில் வேகப்பந்து வீச்சு நன்றாக எடுபடும். டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு இன்னிங்ஸின் முதல் 25 ஓவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை வேகப்பந்து வீச்சாளர்களுக்கானது. எனவே, இந்திய பேட்ஸ்மேன்கள் அந்த 25 ஓவர்கள் வரை பொறுமை காக்க வேண்டும். அதன்பின்னர் 50 முதல் 80 ஓவர்கள் வரையில் ரன் குவிக்கலாம். ஆனால், முதல் 25 ஓவர்கள் பேட்ஸ்மேன்களைக் கடுமையாக சோதிக்கும். இரண்டாவதாக நமது பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும். மூன்றாவதாக, ஒரு அணியாக நேர்மறையான எண்ணத்துடன் களத்தில் போராட வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ……..