வழக்கம்போல உலகக்கோப்பையில் பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் , ரோஹித் ஷர்மா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
நிதானமாக விளையாடிய ரோஹித் ஷர்மா அரைசதம் நிறைவு செய்தார். பிறகு சிறிது நேரத்தில் லோகேஷ் ராகுலும் அரை சதம் அடித்தார்.பின்னர் 24 ஓவரில் பாபர் ஆசாமிடம் கேட்ச் கொடுத்து 57 ரன்னில் வெளியேறினார்.
பிறகு களமிறங்கிய கோலி , ரோஹித் ஷர்மா இருவரும் கூட்டணி இணைய இவர்களின் விக்கெட்டை பறிக்க பாகிஸ்தான் அணி திணறியது.அப்போது 30 ஓவரில் ரோஹித் ஷர்மா தனது சதத்தை நிறைவு செய்து பிறகு 140 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்ததாக கமிறங்கிய ஹர்திக் பாண்டிய 2 பவுண்டரி ,1 சிக்ஸர் விளாசி 26 ரன்கள் குவித்து வெளியேறினார்.பின்னர் தோனி 1 ரன்னும் ,கோலி 77 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள்.இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் முகமது அமீர் 3 விக்கெட்டை பறித்தார்.பாகிஸ்தான் அணி 337 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது.
இந்திய அணி அடித்திருந்த 336 என்ற இலக்கை எட்டிப்பிடிக்க துரத்திய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும் பாகர் சாமன், பாபர் அசாம் தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. முக்கியமாக 7, 12, 9, 0 ரன்களில் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தனர். பாகர் சாமன் 62 ரன்களும் பாபர் அசாம் 48 ரன்களும் அடிந்திருந்தனர்.
பிறகு மைதானத்தில் மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தாமதமாக ஆரம்பித்த இன்னிங்ஸ் 40 ஓவராக குறைக்கப்பட்டு 302 ரன்கள் DLS முறைப்படி இலக்காக கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னர் 35 ஓவர்கள் முடிவடைந்து விட்டதால் மீதமுள்ள 5 ஓவர்களில் 28 ரன்கள் வீதம் அடிக்க வேண்டி இருந்தது.
இந்த கடினமான இலக்கை நெருங்க முடியாத பாகிஸ்தான் அணி, 40 ஓவர்களில் 212 ரன்கள் மட்டுமே அடித்து 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது.