அதிகரித்து வரும் புகையிலை பழக்கம்! ஒரு ஆண்டில் 80 லட்சம் உயிரிழப்பு!
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புகையிலை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்பழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய், காசநோய், ஆஸ்துமா போன்ற நோய்கள் உருவாகிறது.
இந்நிலையில், புகையிலை பழக்கத்தால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் மரணம் அடைவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 40 சதவீதம் பேர் நுரையீரல் நோயால் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், புகை பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும், இதனால் ஒரு ஆண்டுக்கு 60 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், 100 கோடிக்கும் அதிகமானோர் புகையிலை பழக்கம் கொண்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.