அமெரிக்காவில் தினசரி கொரோனா பரவல் 60 ஆயிரத்திற்கும் அதிகமாக இருப்பதுடன், ஒரே நாளில் 809 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரக்கூடிய கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளிலும் தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கொரோனா பரவலை குறைக்க பல நாடுகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வந்தாலும், அவ்வப்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கொரோனா அதிகளவில் பரவி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 809 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தினசரி கொரோனா பாதிப்பு 62 ஆயிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக கலிபோர்னியா, கொலராடோ, மசாசூசெட்ஸ், ஒரேகான், உடா, விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் அதிக அளவில் கொரோனா பரவல் இருப்பதாகவும், பரிசோதனை செய்யும் ஐந்து பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதாகவும் அமெரிக்க மருத்துவ குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள…
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…