சூரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அடுத்து இரண்டு புதிய மருத்துவமனைகளை கொரோனா நோயாளிகளுக்காக மாற்றுவதாக முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, சூரத்தில் கொரோனா வைரஸ் குறித்த நிலைமையை ஆய்வு செய்த முதல்வர் விஜய் ரூபானி மற்றும் மாநில துணை முதல்வரான நிதின் படேல், செய்தியாளர்களிடம் பேசிய போது, ஜூன் 20 முதல் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து ஜூன் 29 முதல் சராசரியாக 200-க்கும் மேற்பட்டோர் கொரனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
முதல் ஊரடங்கிற்கு பின்னர் ஜவுளி மற்றும் வைர தொழிலாளர்களிடமிருந்து தான் அதிகபட்சமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுவதாக அறிவித்துள்ளார். மேலும் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை அடுத்து, சூரத்தின் புதிய சிவில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்டெம் செல் மருத்துவமனை மற்றும் சிறுநீரக மருத்துவமனையை கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக மாநில அரசு 100 கோடி ரூபாய் செலவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கூடுதலாக சூரத்தில் 200 வென்டிலேட்டர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், அவை ஓரிரு நாட்களில் வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனியார் மருத்துவமனைகள் தங்கள் படுக்கைகளில் 50% கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்க ஒப்பு கொண்டதாகவும் கூறிய விஜய் ரூபானி, வைர மற்றும் ஜவுளி தொழில் செய்பவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், கொரோனாவிற்கான விதிமுறைகளை கடைபிடிக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விதிகளை மீறினால் சந்தைகள் உட்பட பலதும் மூடப்படும். ஏனெனில் கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதே எங்கள் முதல் பொறுப்பு என்று கூறியுள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…