இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு!
இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் கொரோனா தாக்கும் பொழுது அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சில சிறிய அளவிலான நாடுகள் அல்லது தீவுகளில் வசிக்கக்கூடியவர்கள் குறைந்த அளவிலான மக்கள் தொகை கொண்டிருப்பதால் கொரோனாவின் தாக்கம் அங்கு சற்று குறைவாக காணப்படுகிறது. ஆனால், 2.1 கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் கொரோனா பாதிப்பு குறைவாக தான் காணப்பட்டது. ஆனால், கடந்த ஒரு வார காலமாக கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
தினமும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனராம். எனவே கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த இலங்கையில் மே 21-ஆம் தேதி முதல் அடுத்த பத்து நாட்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு இலங்கை அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை தற்பொழுது பொது மக்களுக்கு செலுத்தும் பணியில் இலங்கை அரசு தீவிரம் கட்டி வருகிறது.