சென்னையில் ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு – பால்வளத்துறை
சென்னையில் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் என பால்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பால்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் இவ்வாறு தகவல் தெவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2020-21 நிதியாண்டில் சென்னையில் ஆவின் பால் நாள் ஒன்றுக்கு 12.63 லட்சம் லிட்டர் விற்பனையாகியுள்ளது. இதுபோன்று 2021-22 நிதியாண்டில் 13.3 லட்சம் லிட்டர் பால் நாளொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், 2022-23 நிதியாண்டில் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு 15 லட்சம் லிட்டராக உயரும் என்றும் பால்வளத்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.