நேற்றைய போட்டியில் நடந்த சுவாரஷ்யம்! ஸ்டெம்பில் பட்டு சிக்ஸர் சென்ற பந்து
நேற்று இங்கிலாந்து , பங்களாதேஷ் அணி மோதியது.போட்டி கார்டிஃப்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முதலில் இங்கிலாந்து களமிறங்கியது. 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 386 ரன்கள் எடுத்தது.
பின்னர் 48.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 280 ரன்கள் எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில் பங்களாதேஷ் அணியில் தொடக்க வீரர்களாக சவுமிய சர்க்கார், தமீம் இக்பால் இருவரும் களமிறங்கினர்.போட்டியில் நான்காவது ஓவரை இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசினார்.
நான்காவது ஓவரில் முதல் பந்தை ஜோஃப்ரா ஆர்ச்சர் 153 kph வேகத்தில் வீசினார். அந்த பந்தை எதிர்கொண்ட சவுமிய சர்க்கார் அடிக்க முயன்ற போது பந்து பேட்டில் படாமல் ஸ்டெம்பில் மேல் இருக்கும் பேல்ஸ்ஸில் அடித்து நேரடியாக சிக்ஸர் லைன்னிற்கு சென்றது. இதில் சவுமிய சர்க்கார் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.