உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றார்!
ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் கடந்த 13-ம் தேதி தொடங்கியது.தொடங்கிய முதல் நாள் போட்டியில் ஆடவர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம் ,வெள்ளி ,மற்றும் வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றார்கள்.
முதல் நாள் போட்டியில் இந்திய 2 தங்கம் , 2 வெள்ளி ,மற்றும் 1 வெண்கலம் பதக்கங்களை கைப்பற்றியது.மீண்டும் இரண்டாவது நாள் போட்டியில் 4 தங்கம் , 5 வெள்ளி ,மற்றும் 2 வெண்கலம் பதக்கங்களை இந்திய அணி வென்றது.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் மேலும் 3 பதக்கங்கள் இந்திய வென்றது.நேற்று நடத்த 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் தமிழ்நாட்டை சார்ந்த இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கத்தை வென்றார்.இதே போட்டியில் மெஹோலி கோஷ் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
இதன் மூலம் இந்தியா 6 தங்கம் , 7 வெள்ளி ,மற்றும் 3 வெண்கலம் பதக்கங்களுடன் பதக்கபட்டியலில் முதலிடத்தில் உள்ளது.