அமெரிக்காவில் சரிந்து விழுந்த 12 மாடி கட்டிடம் ;பலர் உயிரிழப்பா? வீடியோ உள்ளே…!

Default Image

அமெரிக்காவில்,12 தளங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று நேற்று திடீரென்று சரிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது,மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியான்மி பீச் பகுதியில் உள்ள 12 தளங்கள் கொண்ட ஒரு அடுக்குமாடி கட்டிடம், “சாம்ப்லைன் டவர்ஸ் சவுத்” என்று அழைக்கப்படுகிறது.

இது 1981 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.இதன்காரணமாக,அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த சில வாரங்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபட்டு வந்தது.

இந்நிலையில்,நேற்று அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று சரிந்து விழுந்தது.இதனைக் கேள்விப்பட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய 12 வயது சிறுவன் உட்பட 102 பேரை மீட்டு,சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து,அந்த கட்டிடத்தில் வசித்த 102 பேரை அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.ஆனால்,மேலும் 99 பேர் கணக்கிடப்படவில்லை என்று மேயர் லெவின் காவா கூறினார்.ஒரே இரவில் கட்டிடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது சரியாக தெரியாததால்,இடிபாடுகளில் சிக்கியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மாறுகின்றன என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.எனினும்,கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன்பு அதில் மக்கள் பலர் இருந்ததனால்,உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து,புளோரிடாவின் அரசு ரான் டிசாண்டிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”சரிவு கடுமையானது,எனினும்,இடிபாடுகளில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்ற மீட்புக்குழுவினர் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்”,என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,கட்டிடம் சரிந்ததற்கான உண்மையான காரணம் குறித்து அறிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்