விஜய் சேதுபதியின் அடுத்த பாலிவுட் படத்தின் டைட்டில்.! ஹீரோயின் யார் தெரியுமா.?

விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கவிருக்கும் பாலிவுட் படத்திற்கு மெர்ரி கிறிஸ்துமஸ் என்று டைட்டில் வைத்துள்ளனர் .
தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல தென்னிந்திய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி . தற்போது பாலிவுட்டிலும் களமிறங்கி கலக்கவுள்ளார் . அதற்கு முதல் படியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகர் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் ,அதனை சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி இந்தியில் செம ஹிட்டடித்த அந்தாதூன் திரைப்படத்தின் இயக்குனரான ஸ்ரீராம் ராகவன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் .’மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்று டைட்டில் வைத்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடிக்கிறார்.ரமேஷ் தயூரானி தயாரிக்கும் இந்தப் படத்தின் ரன்னிங் டைம் இடைவெளி இல்லாமல் 90 நிமிடங்கள் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025