வெளியான மூன்று நாட்களில் தலைவி வசூல் இத்தனை கோடியா.?
தலைவி திரைப்படம் வெளியான 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
தெய்வ திருமகள், தலைவா, ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமான ஏ எல் விஜய் அடுத்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து “தலைவி” என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமியும், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் நடித்துள்ளார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதி வேடத்தில் நாசரும், ஆர்.எம் வீரப்பனாக சமுத்திரக்கனியும், எம்.ஆர் ராதாவாக ராதா ரவியும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு இயக்குனர் ஏ எல் விஜய்யை பாராட்டினார்.
இந்த நிலையில், தற்போது வெளியான 3 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் 4.86 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
3 நாட்களில் தலைவி திரைப்படம் இந்தியில் சுமார் 1 கோடி வசூலலித்ததுள்ளது. இந்தியில் வெளியான முதல் நாள் (வெள்ளிக்கிழமை) ரூ .25 லட்சமும், சனிக்கிழமை ரூ .30 லட்சமும், ஞாயிற்றுக்கிழமை ரூ .45 லட்சமும் வசூலலித்ததுள்ளது.