தித்திக்கும் சுவையில் கார்ன் ஃபிளவர் அல்வா செய்வது எப்படி
பண்டிகை காலங்களில் அல்வா இல்லாத விருந்தே இருக்க முடியாது. அல்வாவில் பல வகைகள் உண்டு.அல்வாவை விரும்பாத நபர்களே இருக்க முடியாது.
- தித்திக்கும் சுவையில் கார்ன் ஃபிளவர் அல்வா செய்வது எப்படி?
இந்த பதிப்பில் கார்ன் ஃபிளவர் அல்வா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சோள மாவு – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
ஃபுட் கலர் – 1 சிட்டிகை
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
சர்க்கரை – 1 1/2 கப்
நெய் – 4 டீஸ்பூன்
முந்திரி – 10
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து சோள மாவு, சர்க்கரை, ஃபுட் கலர், ஏலக்காய் தூள், தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்து கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இந்த கலவையை ஊற்றி கைவிடாமல் நன்கு கிளற வேண்டும். இந்த கலவை ஜெல்லி பதத்திற்கு வந்தவுடன் கால் ஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் முந்திரி சேர்த்து 2 நிமிடங்கள் நன்கு கிளர வேண்டும் .
அதற்கு பிறகு 2 நிமிடங்கள் கழித்து அல்வா பதத்திற்கு வந்தவுடன் சிறிதளவு நெய் ஊற்றி இறக்கவும். பின்பு ஒரு தட்டில் சிறிதளவு நெய் தடவி அதில் இதனை ஊற்றி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும். இப்போது சுவையான கார்ன் ஃபிளவர் அல்வா ரெடி .