ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் 799 பேர் உயிரிழந்துள்ளனர்!
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21,571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 799 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் ஆதிக்கம் காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம், தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், ரஷ்யாவிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவிக்கொண்டிருக்கிறது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 21,571 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 799 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.
மேலும், தலைநகர் மாஸ்கோவில் மட்டும் புதிதாக 2,076 பேர் கொரோனாவால் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65,12,859 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,67,241 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி மருத்துவமனையில் 5,36,841 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20,067 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58,08,777 ஆக அதிகரித்துள்ளது.