பிரான்ஸ் நாட்டில் இருந்து 5 வது தவணை முறையில்,புதிய 4 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
பிரான்ஸ் நாட்டில் உள்ள டஸ்ஸால்ட் ஏவியேசன் என்ற நிறுவனத்திடம் இருந்து,ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக,கடந்த 2016 ஆம் ஆண்டு அந்நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி, டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனம் இதுவரை 14 ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவிடம் கொடுத்துள்ளது.
இந்த நிலையில்,இந்தியாவில் இருந்து 5 நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள இந்திய விமானப் படைத் தளபதி ஆர்.கே.எஸ்.பதௌரியா, பிரான்ஸின் மெரிக்னேக் போர்டியாக்ஸ் விமானப் படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,மேலும் 4 ரஃபேல் போர் விமானங்களை கொடியசைத்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பிரான்ஸ் சுற்றுப்பயணம் வந்திருக்கும் இந்திய விமானப்படைத் தளபதி,மேற்கொண்டு இந்தியாவுக்கு அனுப்ப இருக்கும் 4 ரஃபேல் போர் விமானங்களை பார்வையிட்டுள்ளார். இந்த 4 போர் விமானங்களும் தடையின்றி இந்தியா வந்தடைய,பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படை மூலமாக நாடு வானிலேயே எரிபொருள் நிரப்பப்படும்.மேலும்,தற்போதுள்ள கொரோனா பரவல் காலத்திலும் குறித்த நேரத்தில் இந்தியாவிடம் போர் விமானங்களை ஒப்படைக்கும் பிரான்ஸ் நிறுவனத்துக்கும்,பிரான்ஸ் விமாப் படைக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்”,என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி,4 ரஃபேல் போர் விமானங்களும் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்,இந்தியாவிடம் கைவசமாக 18 அதிநவீன ரஃபேல் போர் விமானங்கள் உள்ளன.இவற்றின் மூலம் இந்திய விமானப் படையின் பலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…