தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதலர்களுக்கு மரண தண்டனை
தாய்லாந்தில் மேற்கு பகுதியில் உள்ள புகெட் தீவில் நேற்று முன்தினம் வழக்கமான ரோந்து பணியில் தாய்லாந்து கடற்படை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது கரையில் இருந்து 12 மைல் தூரத்தில் கடலில் மிதக்கும் கான்கிரீட் வீடு கட்டி உள்ளனர்.
அருகில் சென்ற கடற்படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் அதில் யாரும் இல்லை. இது குறித்து விசாரித்த போது கடற்படை அதிகாரிகள் அமெரிக்காவை சேர்ந்த சாத் எல்வர்டோஸ்கி மற்றும் தாய்லாந்தை சேர்ந்த அவரது காதலி சுப்ரானி தெப்ட் ஆகியோர் இந்த வீட்டை கடலில் கட்டி வாழ்ந்து வந்ததாக தெரிய வந்தது.
இந்நிலையில் தாய்லாந்து கடற்படை அதிகாரிகள் அவர்கள் இருவரின் மீது புகெட் போலீஸில் புகார் செய்தனர்.வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த குற்றத்தை மறுத்துள்ள சாத் தான் கட்டி இருக்கும் வீடு கரையில் இருந்து 13 மைல் தூரத்தில் இருப்பதாகவும் , இது தாய்லாந்தின் நீர் பரப்புக்கு அப்பால் உள்ளது என கூறுகிறார்.