இலங்கையில் பரிதாபம்.! பயணிகள் ரயில் மோதி 3 யானைகள் பலி.!
இலங்கையில் கொழும்பு – மட்டக்களப்பு வழியாக சென்ற ரயில் யானைகள் மீது மோதியதில் 3 யானைகள் உயிரிழந்தன.
இலங்கையில் கொழும்பு – மட்டக்களப்பு இடையேயான ரயில் தடத்தில் இன்று பயணிகள் ஒன்று ரயில் அதிகாலை இரண்டு மணி அளவில் வந்து கொண்டிருக்கையில் அந்தப் பகுதியில் உலா வந்து கொண்டிருந்த யானைகள் ரயிலின் குறுக்கே வந்துவிட்டன.
அப்போது ரயிலானது யானைகள் மீது பயங்கர சத்தத்துடன் மோதி விட்டது. அதன் காரணமாக மூன்று யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டன. மேலும் பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விட்டன.
நல்லவேளையாக பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இதனால் ஏற்படவில்லை. ஆனால், மூன்று யானைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கொழும்பு – மட்டக்களப்பு இடையே ரயில் சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையை சீர் செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.