நியூசிலாந்தில் அல் நூர் மசூதி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது !!
- கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர் மசூதியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- துப்பாக்கிச்சூட்டில் முதல் கட்டமாக 6 பேர் இறந்ததாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து உள்ளது.
நியூசிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர் மசூதியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் போலீசார் அல் நூர் மசூதியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது .
இந்த துப்பாக்கிச்சூட்டில் முதல் கட்டமாக 6 பேர் இறந்ததாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து உள்ளது.
போலீசாருக்கும் அடையாளம் தெரியாத நபர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடப்பதாக உள்ளூர் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய கிறிஸ்ட்சர்ச் பகுதியில் மக்கள் வீதிகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் , எனவும் சந்தேகத்துக்குரிய நபர்கள் நடமாட்டங்கள் இருந்தால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இது போல் இரண்டாவது துப்பாக்கிச்சூடு லின்வுட் புறநகர் பகுதியின் மசூதியில் நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இது போல் நகரில் பல இடங்களில் வெடிகுண்டுகள் நிரப்பிய கார்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.