மாங்காயில் இவ்வளவு நன்மைகளா.? எப்படியாது வாங்கி சாப்பிடனும்..!

Default Image

 

பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும்.

கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் உடலின் நீர்ச்சத்தை இழந்து, அதனால் உடல் வெப்பமடைந்து காய்ச்சல் அல்லது சில நேரங்களில் சுய நினைவை இழக்க நேரிடும். ஆனால் மாங்காயை உட்கொண்டு வருவதன் மூலம், அதில் உள்ள சக்தி வாய்ந்த குளிர்மிக்க உட்பொருள், உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரித்து, இப்பிரச்சனையைத் தடுக்கும்.

மாங்காயில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலில் எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க உதவி, அதனால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்து, இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.

பச்சை மாங்காயில் ஆவியாகக் கூடிய உட்பொருட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான திரவத்தின் உற்பத்தியைத் தூண்டி, செரிமான பிரச்சனைகளில் இருந்து தடுத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆகவே கோடையில் வயிற்று பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமானால், மாங்காய் துண்டுகளை சாப்பிடுங்கள்.

பருவ நிலை மாற்றம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்றுக்களால் நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுபவராயின், பச்சை மாங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் பச்சை மாங்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுக்களின் அபாயத்தில் இருந்து தடுக்கும். நீங்கள் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டு வந்தால், பச்சை மாங்காயை சாப்பிடுங்கள். இதனால் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ஏனெனில் மாங்காய் பித்தநீரின் சுரப்பை அதிகரிக்கும் மற்றும் குடலை பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும். பச்சை மாங்காய் இரத்தம் சம்பந்தமான பிரச்சனையில் இருந்து விடுதலை தரும். ஏனெனில் மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதிலும் மாங்காயை உட்கொண்டு வந்தால், இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும் மற்றும் புதிய இரத்த செல்கள் உருவாகும்.

நிறைய பேருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் மாங்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொலாஜனின் கூட்டுச்சேர்க்கையில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே மாங்காயை உட்கொண்டால் சருமத்தின் பொலிவு அதிகரிப்பதோடு, முதுமையும் தள்ளிப் போகும்.

மாங்காயில் உள்ள உட்பொருட்கள், சருமத்துளைகளில் எண்ணெய் மற்றும் அழுக்குகள் தேங்குவதைத் தடுக்கும்.

அதற்கு பச்சை மாங்காயை துண்டுகளாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு இரவில் படுக்கும் முன் முகத்தைக் கழுவி, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ, முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்