வரலாற்றில் இன்று..! டிசம்பர்-04 கடற்படையினர் தினம்..!
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ஆம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது.
1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஒன்று நடைபெற்றது. அதாவது கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு முன்பு அந்த போரில் இந்திய கடற்படை டிசம்பர் நான்காம் தேதி அன்று பாகிஸ்தானின் உள்ள கராச்சி துறைமுகம் மீது ஒரு அவசர கடல்வழி தாக்குதல் நடத்திய இந்திய கடற்படையினர். இந்த தாக்குதலில் பி.என்.எஸ் முஹபிஸ் மற்றும் பி.என்.எஸ் கைபர் கப்பல்களை இந்திய ஏவுகணைகள் தாக்கி மூழ்கடித்தன.
மேலும் இந்திய கடற்படையினரால் மற்றோரு பாகிஸ்தானி கப்பலான பி.என்.எஸ் ஷாஜஹான் என்ற கப்பலை கூட இந்திய கடற்படையால் சேதபடுத்தப்பட்டது. அதனையடுத்து இந்திய ஏவுகணை படகுகள் கராச்சி துறைமுகத்தில் உள்ள எரிப்பொருள் கிடங்குகளை தாக்கி எரிய வைத்தன. இந்த தாக்குதல் நடவடிக்கைகள் ஆபரேஷன் திரிசூலம் எனப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தாக்குதல்கள் ஆபரேஷன் மலைப்பாம்பு என்றும் அழைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்திய கடற்படையின் சிறப்பான நடவடிக்கைவெற்றியை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் நான்காம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாடுகிறது. மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு பின்பு மிகப் பெரிய கப்பற்படை தாக்குதல் நடைபெற்றது இதே நாளில் தான்.