வரலாற்றில் இன்று (30.11.2019) எம். ஜி. ஆர் மனைவியின் பிறந்த நாள்

Published by
murugan

கேரளா மாநிலத்தில் உள்ள திருவாங்கூர் தனியரசிற்கு உட்பட்ட வைக்கம் என்னும் ஊரில் வாழ்ந்த நாயர் குலத்தைச் சேர்ந்த நாணி என்னும் நாராயணம்மாவிற்கு 1923 -ம்  ஆண்டு நவம்பர் 30-ம் நாள் ஜானகி பிறந்தார்.இவருக்கு மணி என்ற நாராயணன் என்னும் தம்பி இருந்தார்.
வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி முன்னாள் திரைப்பட நடிகை , முன்னாள் தமிழக முதல்வர் பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய எம். ஜி. இராமச்சந்திரனுக்கு மூன்றாவது மனைவி ஆவார்.
ஜானகியின் முன்னோர்களின் சூதாட்டம் மூலம் சொத்தை இழந்து வறுமை காரணமாக ஜானகியின் குடும்பம் 1936 ஆம் ஆண்டு ஜானகி தனது 12-வது வயதில் தன் தாயுடன் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு வந்தார்.
அங்கிருந்த சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார்.ஜானகிக்கு ஆசிரியராக இருந்தவர் கவிஞர் பாபநாசம் சிவன்.இவருடைய தம்பியான இராசகோபலய்யர் ஆவார். ஜானகிக்கு அம்மாவான நாராயணியம்மாள் சிறு வயதிலே திருமணம் செய்து கொண்டதால் இராசகோபலய்யரை திருமணம் செய்து கொண்டார்.
1936-ம் ஆண்டு வெளிவந்த “மெட்ராஸ் மெயில்” திரைப்படத்தில் பாடல்கள் எழுத இராசகோபலய்யருக்கு வாய்ப்புக் கிடைத்தது. எனவே அவர் தன் குடும்பத்தினருடன் சென்னைக்குக் சென்றார். அதனால் ஜானகியும் சென்னைக்குக் சென்றார்.
சென்னைக்கு வந்த ஜானகிர் திரைப்படங்களில் நடிக்க விரும்பினார். ஆனால் நாராயணி அம்மாளுக்கு அதில் விருப்பம் இல்லை.  இராசகோபாலய்யரின் ஊக்குவிப்பால் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
அனந்த சயனம் திரைப்படத்தை இயக்கிய கே. சுப்பிரமணியம் நடன கலா சேவா என்னும் நாட்டியக் குழுவை அமைத்திருந்தார். இக்குழுவில் ஜானகி 1942-ம் ஆண்டு சேர்ந்தார். இக்குழுவில் கே. சுப்பிரமணியத்தின் மனைவியும் , நடிகையுமான எஸ். டி. சுப்புலெட்சுமிக்கு அடுத்த நிலையில் இருந்தார்.
அவரோடு சேர்ந்து  இந்தியா முழுவதும் பயணம் செய்து இவர்கள் நாட்டிய நாடகங்களை நடத்தினர். வள்ளி திருமணம் நாடகத்தில் ஜான்கி முருகனாகவும் சுப்புலெட்சுமி வள்ளியாகவும் நடித்தனர். ஜானகி திரையுலகில் நுழைந்த சில காலத்திற்குள் நடிகர் கண்பதிபட் அறிமுகம் ஆனார். பின்னர் காதலாக மாறி திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு அப்பு என்கிற சுரேந்திரன் என்னும் ஆண்குழந்தை பிறந்தது.ஜானகி இராஜ முக்தி படத்தில்  நடித்தபோது அவருடன் எம். ஜி. ஆர். நடித்தார்.  எம். ஜி. ஆர் முதலாவது மனைவியான பார்கவி என்னும் தங்கமணியின் சாயலின் ஜானகி இருந்ததால், எம். ஜி. ஆர் அவர்கள்  மீது ஈர்ப்பு ஏற்பட்டது.
பின்னர் மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 -ம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் ஜானகியும் , எம். ஜி. ஆர் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். எம். ஜி. ஆர் ,  ஜானகிக்கு எழுதிய  காதல் கடிதங்களை ஜானகியின்  முதல் கணவர்  கண்பதிபட்டின் கைகளில் கிடைத்தன.
இதனால் கணபதிபட்டிற்கும் , ஜானகிக்கும் இடையில் சண்டை சண்டை ஏற்பட்டு ஜானகி ஒரு நாள் நள்ளிரவு தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி எம். ஜி. ஆர் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து கொண்டார்.
ஜானகி தன் கணவர் எம். ஜி. ஆர் . மும்முரமாக அரசியலில் ஈடுபட்டிருந்த காலங்களில் அதன் நிழல்கூட தன்மீது படாத அளவிற்கு விலகி இருந்தார். எம். ஜி. ஆர் 1984 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்ட பின்னர் அவருக்குத் துணையாக அவரோடு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார்.
எம். ஜி. ஆர் 1987 டிசம்பர்  24 ஆம் நாள் மரணமடைந்த பின்னர் ஜானகி 1988 ஜனவரி 7 ஆம் நாள் ஜானகி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். ஆனால் சட்ட மன்றத்தில் தனது தலைமை மீதான தனது கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க இயலாததால் 1988 ஜனவரி30 -ம் நாள் ஆட்சிப்பொறுப்பை இழந்தார்.
அதன் அரசியலை விட்டு வெளியேறி எம்.ஜி.ஆர் உருவாக்கிய காதுகேளதாதோர் பள்ளியின் நிர்வாகத்தினை கவனித்து கொண்டு இருந்தார்.இந்நிலையில் ஜானகி 73-வது வயதில் கடந்த 1996 மே மாதம் 19-ம் தேதி இறந்தார்.
 

Published by
murugan

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago