டி. பி. ராஜலட்சுமி தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அருகே உள்ள சாலியமங்கலம் என்ற ஊரில் பஞ்சாபகேச ஐயர், மீனாட்சி ஆகிய தம்பதிக்கு மகளாக பிறந்தவர் ராஜலட்சுமி.தந்தை அந்தக் கிராமத்தின் கர்ணமாகப் பொறுப்பு இருந்தார்.
ராஜலட்சுமிக்கு எட்டு வயதாக இருக்கும்போதே திருமணமாகி விட்டது.பின்னர் வரதட்சணைக் கொடுமை காரணமாக பிறந்த வீட்டுக்கே வந்து விட்டார் ராஜலட்சுமி.இதை தொடர்ந்து ராஜலட்சுமி தந்தையும் இறக்கவே விதவைத் தாயுடன் ,வறுமையுடன் திருச்சி வந்தார்.
நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் அறிமுகம் கிடைத்ததும் . திருச்சியில் அப்போது வெற்றிகரமாக நடந்து வந்த சாமாண்ணா நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிக்க ராஜலட்சுமிக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.இதனால் தனது 11 வயதில் நாடக நடிகையானார். அவர் நடித்த முதல் நாடகம் “பவளக்கொடி”.
அதன் பின்னர் கே. எஸ். செல்லாப்பாவின் நாடகக் கம்பனியில் சேர்ந்து நடித்தார். அந்நாடகக் குழு பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் நாடகங்களை நடத்தினார்கள்.தான் நடித்த நாடகங்கள் அனைத்திலும் தேச பக்திப் பாடல்களைப் பாடி மக்களின் வரவேற்பைப் பெற்றார். அதே போல கருநாடக இசைப் பாடல்களையும் பாடினார்.
1917 இல் ஆர். நடராஜ முதலியார் தயாரித்த தமிழ்த் திரைப்படவுலகின் முதல் மௌனப் படமான “கீசகவதம்” என்ற படத்தில் நடித்தார். அதையடுத்து 1929 -ல் வெளியான “கோவலன்” எனும் ஊமைப்படத்தில் மாதவியாக நடித்தார். இது இவர் நடித்த இரண்டாவது ஊமைத் திரைப்படமாகும்.
தமிழின் முதல் பேசும் படமான “காளிதாஸ்” இவர் நடித்து வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தைத் தயாரித்தவர் பம்பாய் இம்பீரியல் மூவி டோன் நிறுவனர் அர்தேஷிர் இரானி. இப்படத்திற்காக ராஜலட்சுமி மும்பை சென்றார்.
இத்திரைப்படம் 1931 அக்டோபர் 31 ம் தேதி சென்னையில் கினிமா சென்ட்ரல் என்ற திரையரங்கில் முதன்முதலில் திரையிடப்பட்டது. காளிதாஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து ராஜலட்சுமி ராமாயணம் படத்தில் நடித்தார். 1933 ம் ஆண்டு ராஜலட்சுமி நடித்து வெளிவந்த “வள்ளி திருமணம் “தமிழின் முதல் வெற்றிப்படம் ஆகும்.
அக்காலத்தில் அவருடன் சேர்ந்து நடித்த டி. வி. சுந்தரத்தைத் திருமணம் செய்து கொண்டார். அதனால் கல்கத்தாவில் இருந்தார்.பின்னர் சென்னை திரும்பிய ராஜலட்சுமி சிறீ ராஜம் டாக்கீசு என்ற கம்பனியைத் தொடங்கி மிஸ் கமலா என்ற பெயரில் தானே கதைவசனம் எழுதி கதாநாயகியாக நடித்து தயாரித்து இயக்கி வெளியிட்டார்.
இதன் மூலம் தமிழில் முதல் பெண் தயாரிப்பாளர் எனும் பெயரும் ராஜலட்சுமிக்குக் கிடைத்தது. இப்படம் 1936 இல் வெளிவந்து தோல்வி அடைந்தது.இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களுக்கும் இவரது சகோதரர் டி. பி. ராஜகோபால் இசையமைத்தார். மொத்தம் 14 திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…