அதிர்ச்சி ரிப்போர்ட்.! கொரோனாவுக்கு பலியான சிறுபான்மையினர்களில் இந்தியர்களே அதிகம்.!
இங்கிலாந்தில் 18,738 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அதில் 16.2 சதவீதம் பேர் சிறுபான்மையினர். அதிலும், 3 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியினர் என தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வல்லரசு நாடுகள் என அனைத்து நாடுகளையும் கொரோனா பாரபட்சமின்றி தாக்குகிறது.
இங்கிலாந்து நாட்டில் இதுவரை கொரோனா வைரஸால் 1,38,078 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 18,738 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இறந்தவர்களில் 16.2 சதவீதம் பேர் சிறுபான்மையினர். அதிலும், 3 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியினர். சிறுபான்மையினர்களில் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த சிறுபான்மையினர்களில், 2.9 சதவீத கரீபியன் நாட்டினர் எனவும், 2.1 சதவீத பாகிஸ்தானை சேர்ந்தவர்களும், 1.9 சதவீத ஆப்பிரிக்கவை சேர்ந்தவர்கள் எனவும், 0.4 சதவீதத்தினர் சீனர்களாகவும், 0.6 சதவீதத்தினர் வங்க தேசத்தை சேர்ந்தவர்களாகவும், 1.9 சதவீதத்தினர் மற்ற ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும், 0.9 சதவீதத்தினர் இதர நாடுகளை சேர்ந்தவர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.