இலங்கை தலைநகர் கொழும்புவில், காலிமுக திடலில் போராடி வந்த போராட்டக்காரர்கள் முழுவதும் வெளியேறிவிட்டனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் போராட்டம் வெடித்தது. பொதுமக்கள் , மாணவர்கள் என பல்வேறு போராட்ட குழுவினர் , கொழும்புவில் உள்ள காலிமுக திடலில் போராட்டம் ஆரம்பித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த போராட்டம் தொடர்ந்தது. அதனை தொடர்ந்து , அரசு மாளிகையில் போராட்டம், முக்கிய தலைவர்கள் ஓட்டம் , அரசியல் மாற்றம் என அடுத்தடுத்து உலக நாடுகளை உற்றுநோக்க வைத்தது.
புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பிறகு,நிலைமை தற்போது கொஞ்சம் சரியாக ஆரம்பித்துள்ளது. போராட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.
இறுதியாக காலிமுக திடலில் போராட்டக்கார்களை ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதற்கு முன்னரே பல்வேறு அமைப்பினர் திடலை காலி செய்து வெளியேறிவிட்டனர்.
இதனை தொடர்ந்து, மீதமுள்ள போராட்டக்காரர்களும், கொழும்பு காலிமுக திடலில் இருந்து காலி செய்துள்ளனர். ஆனாலும், எங்கள் போராட்டம் வேறு வகையில் தொடரும் என கூறிவிட்டு தான் அங்கிருந்து போராட்டகாரர்கள் வெளியேறியுள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…