நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், இந்த திரைப்படம் கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
இதனால் மீண்டும் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் மே 12 ரம்ஜான் தினத்தினை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா 2 வது அலை பரவி வருவதால் திரையரங்குகளில் மூடப்பட்டு இருப்பதால் டாக்டர் படம் நேரடியாக ஓடிடியில் வெளியீடுவதற்காண பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், “தினமும் டாக்டர் திரைப்படத்தின் அப்டேட் கேட்டு பலர் எங்களைத் தொடர்பு கொள்கிறீர்கள். முழு படமும் முடித்து கையில் ரெடியாக உள்ள நிலையில், கொரோனா காரணமாக அதை வெளியிட முடியாமல், பல பொருளாதார பிரச்சனைகளையும் எதிர்கொண்டுள்ளோம். படம் நல்லபடி ரிலீஸ் ஆக எனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன்.
மறுபக்கம், கொரோனா இரண்டாவது அலையில் சுற்றங்களையும், நண்பர்களையும் இழந்து கொண்டிருக்கிறேன். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் டாக்டர் படத்தின் ரிலீஸ் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…