இஸ்லாமாபாத்: பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் என்று அமெரிக்காவின் அறிக்கை அன்மையில் வெளியான அடுத்த நாளே, பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை தியாகி எனப் புகழந்த சம்பவம் சர்வதேச அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை பாகிஸ்தான் தொடர்பாக கடந்த புதனன்று வெளியிட்ட மதிப்பீடு அறிக்கை கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் இன்னமும் பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கி வருகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை குறிவைத்து செயல்படுகின்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதத்தின் இயக்க தலைவர் மசூத் அசார் பாகிஸ்தான் அரசின் பாதுகாப்பில் தற்போது வரை இருப்பதாக நம்பப்படுகிறது என கூறியிருந்தது.
இந்நிலையில் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து வியாழனன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு பார்லிமென்டில் பேசினார். அப்போது அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடனை தியாகி என புகழ்ந்தார்.
“பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு உதவிய விதத்திற்காக என் நாடு அவமானத்தை சந்திக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்துவிட்டு, அதற்காக அவர்களிடமிருந்து விமர்சனத்தையும் பெற வேண்டிய நாடு வேறு எதுவும் இருக்க முடியாது. அபோட்டாபாத்தில் ஒசாமா பின்லேடனை அமெரிக்கர்கள் கொன்றனர். அவர் தியாகி. அமெரிக்கா நம் நாட்டுக்குள் நுழைந்து நம்மிடம் கூட சொல்லாமல் ஒருவரைக் கொன்றது பெரிய அவமானம்.” என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.இந்த பேச்சு குறித்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது.
இந்நிலையில் இம்ரான் கானின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை சர்வதேச அளவில் பெற்றுத் தந்துள்ளது மட்டுமில்லாமல் அந்நாட்டு எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் இம்ரான் கானை கடுமையாக விமர்சிக்கின்றனர். இது குறித்து பாகிஸ்தான் கட்சியின் எம்.பி ஷெர்ரி கூறுகையில் ஒசாமா பின்லேடன் பிரதமருக்கு வேண்டுமானால் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் நாட்டு மக்களுக்கு அவர் குற்றவாளி தான்” என்று கூறியனார்.அதே போல பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் கவாஜா ஆசிப், “எங்கள் மண்ணிற்கு பயங்கரவாதத்தை கொண்டு வந்தவர் ஒசாமா, அவர் என்றைக்கும் பயங்கரவாதி தான்.” எனவும் கண்டித்துள்ளார்.
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…