பங்காளிகளை சீண்ட வேண்டாம்!விளையாடுங்கள் போதும்..பாக்.,வீரர்களுக்கு இம்ரான் தடை
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாக்.,வீரர்கள் விக்கெட் எடுக்கும் போது கிண்டலில் ஈடுபடவை தடை செய்து பாக்..,பிரதமர் இம்ரான் உத்தரவிட்டுள்ளார்.
உலககோப்பை போட்டியானது இங்கிலாந்தில் கடந்த 31 தேதி கோலகலமாக தொடங்கியது .இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடு வருகிறது.இதில் இந்திய அணி நாளை ஆஸ்திரிலியாவை எதிர்கொள்கிறது.
புல்வமா தாக்குதல் நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் ராஞ்சியில் இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர்.இதற்கு பாக்..,கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தியா -பாகிஸ்தான் அணிகள் வரும் 16 தேதி மோதுகிறது.இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணி வீரர்கள் விக்கெட் எடுக்கும் போது அதனை வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டு உள்ளது.அதற்கு அந்நாட்டு பிரதமர் இம்ராகான் தடை விதித்து உள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள் இந்திய அணி வீரர்களை சீண்டும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கூறியுள்ளார்.மேலும் விளையாட்டில் அரசியலை புகுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது வரும் 16 தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.