தொடக்க வீரர்களை ஒரே மாதிரி , ஒரே ரன்னில் சுருட்டிய இம்ரான் தாஹிர்!
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் , தென்னாப்பிரிக்கா அணியும் மோதி வருகிறது.இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக இமாம்-உல்-ஹக், ஃபக்கர் ஜமான் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அணியின் ரன்களை சேர்த்தனர்.
இந்நிலையில் இவர்களின் கூட்டணியை பிரிக்கமுடியாமல் இருந்த நேரத்தில் 15-வது ஓவரில் இம்ரான் தாஹிர் வீசிய பந்தை அடித்தபோது இம்ரானிடமே தனது கேட்சை கொடுத்து 44 ரன்னில் ஃபக்கர் ஜமான் வெளியேறினார்.
பின்னர் நிதானமாக விளையாடிய இமாம்-உல்-ஹக் 21-வது ஓவரில் இம்ரான் தாஹிர் வீசிய பந்தை அடித்தபோது அம்லாவிடம் கேட்சை கொடுத்து 44 ரன்னில் வெளியேறினார்.
தொடக்க வீரர்கள் இருவருமே கேட்சையும் கொடுத்து ஒரே ரன்னில் வெளியேறினர். மேலும் இவர்கள் இம்ரான் தாஹிர் ஓவரில் அவுட் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.