பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மனைவி முகத்தை யாரேனும் பார்த்துளீர்களா?!

Default Image

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பாக்கிஸ்தான் பிரதமருமான இம்ரான்கான் அண்மையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டிற்கு தனது மனைவி புஸ்ரா பிபியை கூட்டி வந்திருந்தார். ஆனால், யாரும் அவரது மனைவியின் முகத்தை பார்க்க முடியவில்லை.

காரணம் அவர் மனைவி புஷ்ரா பிபி, தன் தலை முதல் கால் வரை துணியால் மறைக்கும்படி இஸ்லாமிய பெண்கள் உடுத்தும் ஆடை உடுத்தி வந்திருந்தார். இதனால் யாரும் இம்ரான் கானின் மனைவிமுகத்தை பார்க்கவில்லை.

இதுகுறித்து இம்ரான்கான் வீட்டில் வேலை செய்பவர் ஒரு பத்திரிக்கையாளருக்கு பேட்டியில்,  இம்ரான்கானின் மனைவி இஸ்லாம் நெறிமுறைகளை கடுமையாக பின்பற்றுபவர். அதனால் அவர் வீட்டில் இருக்கும்போது கூட தனது உடல் முழுக்க மறைக்கும் படிதான் துணி உடுத்தி இருப்பார். அவரது முகத்தை வெளியாட்கள் யாருமே பார்த்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் கானுக்கு ஏற்கனவே கவார் மனோக்கரா எனும் பெண்ணை மணந்து இருந்தார். அந்த பெண்ணை 2017இல் விவாகரத்து செய்துவிட்டு அதன்பின்னர் புஷ்ரா பிபியை  காதலித்து திருமணம் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்