ஆப்கானிஸ்தான் தூதரின் மகளை கடத்தியவர்களை கைது செய்ய இம்ரான் கான் உத்தரவு ..!
ஆப்கானிஸ்தான் தூதரின் மகளை கடத்தியவர்களை 48 மணி நேரத்தில் கைது செய்ய பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
அண்டை நாடான பாகிஸ்தானில் பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் சில்சிலா அலிகில் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணியளவில் ஜின்னா சந்தை அருகே சில்சிலா அலிகில் கடத்தப்பட்டு இரவு 7 மணியளவில் காயமடைந்த நிலையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் ஆப்கான் தூதரின் மகள் கடத்தலில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்ய அனைத்து விதமான resources பயன்படுத்துமாறு உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமதுவுக்கு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் காவல்துறையும் பிற சட்ட அமலாக்க நிறுவனங்களும் இந்த சம்பவத்தை TOP PRIORITY இல் விசாரிக்க வேண்டும், இந்த விஷயத்தின் உண்மையை கொண்டு வர வேண்டும் மற்றும் குற்றவாளிகளை 48 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என்று பிரதமர் உள்துறை அமைச்சருக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரித்து சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் மற்றும் குடும்பத்தினருடன் இஸ்லாமாபாத் காவல்துறை தொடர்ந்து தொடர்பில் உள்ளது.