இம்ரான் கான் கொரோனா வைரசை போன்றவர் – மரியம் நவாஸ்

Default Image

இம்ரான்கான் போன்ற நபர்களின் பெயர்களை பற்றி பேசுவதே வலி ஏற்படுத்துகிறது.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் துணை தலைவராக உள்ளார் மரியம் நவாஸ். இவர் வருகின்ற ஞாயிறன்று கில்ஜித் பலுதிஸ்தானில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, 7நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக குப்பிஸ் என்ற பகுதியில், பிரச்சார கூட்டத்தில், மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் என்ற தொற்று சமீபத்தில் உலகிற்கு வந்துள்ளது. ஆனால், பாகிஸ்தானில் அது கடந்த 2018-ம் ஆண்டிலேயே பரவி விட்டது. இந்த தொற்றுநோய்க்கு முகக்கவசங்களை அணிந்து கொண்டால் போய் விடாது. அதனை நீங்கள் தூக்கி எறிய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இம்ரான்கான் போன்ற நபர்களின் பெயர்களை பற்றி பேசுவதே வலி ஏற்படுத்துகிறது. பாகிஸ்தானில் கான் மற்றும் அவரது கட்சி இன்றைய தினம் நோயை பரப்பி கொண்டிருக்கிறது என்றும், பிரதமர் அலுவலகத்தில் இருக்க கான் தகுதியற்றவர் என்றும், உங்கள் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு உள்ளது. அதன் பெயர் நவாஸ் ஷெரீப் என்று கூறி தங்களது கட்சிக்கு ஆதாரவளிக்கும்படி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்