வைகை புயலின் அடுத்த படத்தினை குறித்த முக்கிய அப்டேட்.!
நடிகர் வடிவேலு அடுத்ததாக சுராஜ் இயக்கத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
வைகைப் புயல் வடிவேலு, கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை .தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிம்புவிற்கு வில்லனாக வடிவேலு அவர்கள் நடிப்பதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தது. அதனையடுத்து கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இவர் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மருதமலை, தலைநகரம், கத்தி சண்டை உள்ளிட்ட படங்களில் வடிவேலுவிடம் இணைந்து பணியாற்றிய இயக்குநர் சுராஜ் இயக்கும் வெப் சீரிஸில் வடிவேலு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை சுராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். திகில் கலந்த நகைச்சுவை கதையாக உருவாகும் இந்த வெப் சீரிஸை 9 எபிசோடுகளாக உருவாக்கவுள்ளதாக கூறியுள்ளார். இந்த வெப் சீரிஸை தயாரிப்பதற்காக அமேசான் பிரேம் மற்றும் ஹாட் ஸ்டாருடன் வடிவேலு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சுராஜ் கூறியுள்ளார்.