ஓ மை கடவுளே பட ஹீரோவின் அடுத்த படத்தினை குறித்த முக்கிய அப்டேட்.!
அசோக் செல்வனின் அடுத்த படத்தை ஸ்வாதினி இயக்குவதாகவும், அதன் பூஜை எளிமையாக நடைப்பெற்றதாகவும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அசோக் செல்வனின் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ஓ மை கடவுளே. இந்த படத்தில் வாணி போஜன் மற்றும் ரித்திகாசிங் ஆகிய இரண்டு பேர் கதாநாயகியாக நடித்திருந்தனர். மேலும் இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றியை பெற்றது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் அசோக் செல்வன். தற்போது இவர் பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளாராம். இந்த நிலையில் தற்போது, அசோக் செல்வன் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளாராம்.அதனை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் மூலம் ஸ்வாதினி முதன்முதலாக பெண் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கிறது. மேலும் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நிஹாரிகா கொனிதேலா நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். ஏ. ஆர். சூர்யா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்கிறார். தயாரிப்பு நிறுவனத்தின் 7வது புராஜெக்ட்டான இந்த படத்தின் பூஜை மிகவும் எளிமையாக நேற்றைய தினம் நடைப்பெற்றதாக கூறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
.@Kenanya_Off untitled project no.7 announced.
Starring @AshokSelvan @IamNiharikaK | Directed by @iam_swathini | Music @leon_james | DOP @ArSoorya | Editor @ARichardkevin | PRO @SureshChandraa @ProRekha @DoneChannel1 pic.twitter.com/xll7nMnXKW
— Done Channel (@DoneChannel1) June 9, 2020