விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் மற்றும் அஜித் இவர்களுக்கு அடுத்த இடத்தில் உயர்ந்து இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போது இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். வில்லனாக விஜய் சேதுபதியை பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பல படங்களை தனது கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி, தற்போது நடிக்கும் படங்களில் ஒன்று துக்ளக் தர்பார்.
அறிமுக இயக்குனரான டெல்லி பிரசாத் இயக்கும் இந்தப் படத்தில் அதிதிராவ் ஹைத்ரி, மஞ்சிமா மோகன், பார்த்திபன், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை நாளை மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசியல் சம்பந்தப்பட்ட இந்த படத்தின் அப்டேட் குறித்து வெளியான தகவல் தற்போது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…