தளபதி-65 குறித்த முக்கிய அப்டேட்.! நான்காவது முறையாக இணையும் கூட்டணி.!

Default Image

தளபதி 65-ஐ முருகதாஸ் இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரது அடுத்த படம் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தளபதி 65 படத்தை முருகதாஸ் அவர்கள் இயக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதனை அதிகாரப்பூர்வமாக்குவதற்கான அனைத்து ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் தளபதியின் அடுத்த படத்தை நான்காவது முறையாக முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்வதாகவும், எஸ். தமன் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹீரோயினுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்