வலிமை டீசர் குறித்து வெளியான முக்கிய தகவல்..??

Default Image

வலிமை படத்தின் டீசர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல்.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பல போஸ்டர்கள் கடந்த ஜூன் 11-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், வலிமை திரைப்படத்தின் டீசர் எப்போது வெளியாகவுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வலிமை படத்தின் டீசர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாத்துடன் அப்டேட்காக காத்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கார்த்திகேயா, புகழ், அச்சியுத் குமார், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்