சின்னத்திரை நயன்தாராவின் அடுத்த படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு.!

Default Image

சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணிபோஜன் அடுத்ததாக ஆதவ் கண்ணதாசனுடன் தாழ் திறவா என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் தெய்வமகள் தொடரின் மூலம் பிரபலமான வாணிபோஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.கடைசியாக இவரது நடிப்பில் லாக்கப் என்ற படம் ஓடிடியில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக விதார்த் அவர்கள் நடித்து தயாரிக்கும் படத்திலும், சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்திலும், கவிஞரான கண்ணதாசன் அவர்களின் பேரரான ஆதவ் கண்ணதாசன் நடிக்கும் திகில் படம் ஒன்றிலும், விக்ரம் பிரபு நடிக்கும் படத்திலும் கமிட்டாகியுள்ளார் வாணிபோஜன்.

இதில் ஆதவ் கண்ணதாசனுடன் நடிக்கும் படத்தின் டைட்டில் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. ‘தாழ் திறவா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் போஸ்ட்ரை ஆண்ட்ரியா அவர்கள் வெளியிட்டுள்ளார். பரணி சேகரன் என்னும் அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தை குறித்து கூறிய போது, பூமிக்கும், மனிதனுக்கும் இடையேயான பிரச்சனையை தீர்த்துக் வைக்கும் கதையாக இருக்கும் இந்த படத்தில் ஆதவ் கண்ணதாசன் மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் தொல்பொருள் ஆராய்ச்சியாளராகவும், வாணிபோஜனின் கதாபாத்திரத்தை சுற்றி தான் முழு கதையும் இருக்கும் என்றும், லாக்டவுன் முடிந்ததும் சென்னை, கோவை மற்றும் ஊட்டி பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்