மருத்துவ உபகரணங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தடை.! அமெரிக்கா அதிரடி.!
அமெரிக்காவில் தயாரிக்கப்படும், கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 4 லட்சதிக்ரும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டுமே 1,900 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. மொத்தமாக 16,697 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இதனால் அமெரிக்காவில் மருத்துவ ஊழியர்கள் பயன்படுத்தும் உபகாரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த காரணங்களால் அமெரிக்காவில் தயாரிக்கப்படும், கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் உள்நாட்டில் மருத்துவ உபகரணங்கள், முகமூடிகளின் தேவை புர்த்தி செய்யப்படும் எனவும், கொரோனா உயிரிழப்புகள் குறையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.