நோயெதிர்ப்பு சக்தி பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் என்பது வரலாற்றிலேயே கிடையாது – WHO தலைவர் டெட்ரோஸ்!
நோயெதிர்ப்பு சக்தி பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் என்பது வரலாற்றிலேயே கிடையாது என WHO தலைவர் டெட்ரோஸ் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இருப்பினும் ரஷ்யாவில் மட்டுமே இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளும் தடுப்பூசி ஆய்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக அறிவித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய வகையிலான மருந்துகளை கூட பல நாடுகள் கண்டுபிடித்து வருகிறது எனவும், அதற்கான தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெறுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனவை தடுக்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போதும் என்பது தொடர்பான கருத்துக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் கருத்து கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய தடுப்பூசிகள் மூலம் வைரஸை கட்டுப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள், தடுக்க ஒரே வழி இதுதான் எனவும் நினைக்கிறார்கள். ஆனால் அது தீர்வு கிடையாது, நோய் எதிர்ப்பு சக்தி என்பது வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கே. ஆனால் பெரும் தொற்று ஏற்படும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும் என்பது வரலாற்றிலேயே இல்லாத ஒன்று என அவர் கூறியுள்ளார்.