எத்தியோப்பியாவுக்கு 411 மில்லியன் டாலர்கள் அவசர கால கடனுதவி வழங்கிய ஐஎம்எப்.!

Published by
பாலா கலியமூர்த்தி

எத்தியோப்பியாவில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருவதால், மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்த 411 மில்லியன் டாலர்கள் அவசர கால கடனுதவி வழங்கிய ஐஎம்எப்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை மிரட்டி வருகிறது. தற்போது ஆப்ரிக்க நாடுகளின் பக்கமும் இந்த வைரஸ் திரும்பியுள்ளது. நைஜீரியா, எத்தியோப்பியா, கேமரூன், அல்ஜீரியா, மொரோக்கோ உள்ளிட்ட ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இங்கு பொருளாதார வளர்ச்சியிலும், மருத்துவ வசதியிலும் மிகவும் பின் தங்கியுள்ள ஆப்ரிக்க நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருவதால் பெரும் உயிரிழப்புகளை சந்திக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இதன் விளைவு காரணமாக மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேம்படுத்த சர்வதேச நிதியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடனுதவியை எதிர்பார்த்து இருக்கின்றனர். அதுவும், எத்தியோப்பியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அந்நாட்டில் இதுவரை 131 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோன பாதிப்பு குறைவாக இருந்தாலும், அங்கு போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் இன்னும் சில நாட்களில் வைரசின் தாக்கம் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எத்தியோப்பியாவுக்கு 411 மில்லியன் டாலர்கள் அவசர கால கடனுதவி வழங்க ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…

2 hours ago

ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!

வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…

4 hours ago

தற்கொலை முயற்சி அல்ல.. மருத்துவமனையில் பாடகி கல்பனா.! மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…

5 hours ago

SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…

6 hours ago

மீண்டும் மீண்டும் ரஜினியிடம் பாராட்டு! பிரதீப் காட்டில் மழைதான்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…

7 hours ago

பயணிகள் கவனத்திற்கு…தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…

9 hours ago